போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்கிய புள்­ளிகள் தப்பியோட்டம்!

போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளிகள் நான்கு பேர் வெளி­நா­டு­க­ளுக்கு தப்பியோடி­யுள்­ளனர். அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­ற­ச்செ­ய­லுடன் தொடர்­பு­டைய ஒரு­வரும் தப்பிச் சென்­றுள்­ள­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்   சனிக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது ஊழல் மோசடி தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியின் பிர­காரம் குற்­ற­வா­ளி­களை கைது செய்­ய­வில்லை எனவும்   கூறு­கின்­றனர். எனினும் நாம் பல்­வேறு ஊழல் மோசடி தொடர்பில் விசா­ரணை செய்து வரு­கின்றோம். தற்­போது 92 விசா­ரணை அறிக்­கை­களை  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கி­யுள்ளோம். அத்­துடன் நாம் தாக்கல் செய்த 17 வழக்­கு­களில் 11 வழக்­கு­களை நிறைவு செய்­துள்ளோம்.

எனினும் சில விட­யங்கள்  சாதா­ரண குற்­றச்­சாட்­டுகள் அல்ல. மிகவும் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டு­க­ளாகும். இதனை இல­குவில் தீர்க்க முடி­யாது. பொலிஸார் பாரிய அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். தொழில்­நுட்ப வச­திகள் இல்லை.

போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்ளிகள் நான்கு பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர். அத்துடன் திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்பு டையவரும் தப்பிச் சென்றுள்ளார்.