குட்- பை ஜெர்சி நம்பர் 10 . பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.!

சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய ஜெர்ஸி எண்ணான 10-க்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துசச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாடினார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடினார். கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். ரசிகர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் போட்டிகளில் விவியன் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் கருதுகின்றனர்.
சச்சின் எந்தளவிற்கு பேமஸ் ஆனாரோ, அவருடனே சேர்ந்து அவர் ஜெர்ஸியை நம்பர் 10ம் பேமஸ் ஆனது. இவர் விளையாடிய பல நாள் போட்டிகள், ஒரே ஒரு டி-20 போட்டியிலும் அந்த நம்பர் தான் பயன்படுத்தினார். கடைசியாக 2012 மார்ச் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி னார் . அதன்பின், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்று விட்டதால், அதன்பின் இந்திய அணி சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த எண்ணை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
மும்பையை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் தான் ஷர்டுல் தாக்கூர். 2017 செப்டம்பர் மாதம் கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாகூர் 10-ம் எண் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். உடனே இந்த நிகழ்வை எதிர்த்து கிரிக்கெட் மற்றும் சச்சினின் ரசிகர்களிடம் இருந்து வலை தளங்களில் பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது.

மும்பை இந்தியன்ஸ்

ஐபில் இல் சச்சின் விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே. அவர் ஒய்வு பெற்றதும் ஜெர்சி நெ10 ற்கு ஒய்வு அளித்தது அந்த டீம். அதே போல் பிசிசிஐயும் செய்ய வேண்டும் என்று கூறத்தொடங்கினர் ரசிகர்கள்.
எனினும் ஐசிசி விதிமுறைகள் படி எந்த ஒரு நாட்டிற்கும் ஜெர்சி நம்பருக்கு ஒய்வு கொடுக்கும் உரிமை கிடையாது. எனவே இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

எனவே பிசிசிஐயின் ஒரு சிலர் இந்தியாவின் சில சீனியர் வீரர்களுடன் கலந்து ஆலோசனை செய்தனர். இந்திய வீரர்களும் இது தங்கள் சச்சினுக்கு செலுத்தும் மரியாதையாகவே கருத்தியதாலும், ஷரத்துல் தாகூர் போல் வேறு எந்த இளம் வீரரும் ரசிகர்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாக கூடாது என்று, அந்த எண்ணை நீக்குவது சிறந்தது என்று முடிவு செய்துள்ளனர்.