போலி பேஸ்புக்கின் கணக்குகளை முடக்க புதிய திட்டம்!

பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த  அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்களது கணக்கை உறுதி செய்ய புகைப்படங்களை சமர்பிக்க நேரிடும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் மூலம் பேஸ்புக் கணக்குகளை உண்மையில் மனிதர்கள் தான் பயன்படுத்துகின்றனரா அல்லது போட் கொண்டு அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதை பேஸ்புக் கண்டறியலாம் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான துவக்க பணிகளின் ஸ்கிரீன்ஷாட் வெளியானதை தொடர்ந்து பேஸ்புக் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் இதுபோன்ற அம்சங்களை ஏற்கனவே செயல்படுத்த இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் இதற்கென ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும், மைக்ரோசாஃப்ட் சேவைகளில் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் பயணர்களின் முகத்தை கண்டு கணக்குகளை உறுதி செய்கின்றன.

இதுகுறித்து @flexlibris என்ற டுவிட்டர் பயணாளி, பேஸ்புக்கின் புதிய வெரிஃபிகேஷன் அம்சத்தை உறுதி செய்யும் ஸ்கிரீன்ஷாட்டினை பதிவிட்டுள்ளார். அதன்படி பயணரின் முகம் தெளிவாக காணப்படும் புகைப்படத்தை சமர்பிக்க பேஸ்புக் சார்பில் கோரப்படுகிறது. பின் உறுதி செய்யப்பட்டதும் பேஸ்புக் சர்வெர்களில் இருந்து அந்த புகைப்படம் அழிக்கப்பட்டு விடும் என பேஸ்புக் ஸ்கிரீன்ஷாட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சோதனைகளை பேஸ்புக் உறுதி செய்துள்ளதோடு, இந்த அம்சம் பேஸ்புக்கில் இருந்து வெவ்வேறு தளங்கள், கணக்குகளை உருவாக்குவது, ஃபிரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்புவது அல்லது விளம்பர கட்டணங்கள் மற்றும் புதிய விளம்பரங்களை உறுதி செய்வது போன்ற அம்சங்களில் பேஸ்புக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பேஸ்புக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிய ஆட்டோமேட்டெட் மற்றும் மேனுவல் போன்ற அம்சங்களை சோதனை செய்வதில் ஒரு அம்சமாக புதிய போட்டோ டெஸ்ட் அம்சம் இருக்கிறது என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நடவடிக்கைகளை கண்டறியும் வழிமுறைகள் அதாவது புகைப்படத்தை சரியானது தானா என்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தாணியங்கி முறையில் நடைபெறுகிறது. கணக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்து தானா என்பதை பேஸ்புக் புகைப்படம் மூலம் சரியாக கண்டறியும். இந்த சோதனை முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற்றதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் புகைப்படங்களை சோதனை செய்யும் போது சிலரது கணக்குகள் தானாக லாக் அவுட் ஆனதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அதாவதுது, ‘தற்சமயம் உங்களால் உங்களது கணக்கை லாக் இன் செய்ய முடியாது, உங்களது புகைப்படம் உறுதி செய்யப்பட்டதும் உங்களை தொடர்பு கொள்கிறோம் என்ற தகவல் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து உங்களது கணக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக லாக் அவுட் செய்யப்படுகிறது’ என பேஸ்புக் தெரிவித்தது.