பேஸ்புக் மெசேஞ்சர் செயலி திடீர் முடங்க்கம்!

பேஸ்புக் மெசேஞ்சர் செயலி  கடந்த வாரங்களில் இரண்டாவது முறையாகவும்  முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உலகின் பலநாடுகளுளில் பேஸ்புக் மெசேஞ்சர் இவ்வாறு முடங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்ள்ளன.

இதன் காரணமாக , உலகளவில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரத்திலும் இது போன்று பேஸ்புக் மெசேஞ்சர் முடங்கியிருந்தது.

எவ்வாறாயினும் , அது சில மணி நேரங்களில் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் ஒரு வார இடைவௌிக்குள் மீண்டும் பேஸ்புக் மெசேஞ்சர் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சில பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மெசேஞ்சர் செயலி செயற்படுகின்ற போதும் அநேகமானோருக்கு அது செயற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் , உலகம் முழுவதும ்இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பேஸ்புக் மெசேஞ்சர ்முதலில் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

இதன் காரணமாக , பேஸ்புக் பாவனையாளர்கள் மெசேஞ்சர் செயற்படாமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கடந்த 30 ம் திகதி மெசேஞ்சர் செயல் செயலிழந்த போது , அதிகாரிகள் அது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தனர்.

குறித்த அறிக்கையில் , பேஸ்புக் மெசேஞ்சர் செயலிழந்தமை தொடர்பில் தாம் மன்னிப்பு கோருவதாகவும் , அதனை உடனடியாக சீர்செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்து.