யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத்தொகுதி!

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. உயர்கல்விக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் டி.கே.திசாநாயக்கா, ஜப்பானிய தூதரகமேலதிகாரி கோ.ஜி யாகி, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தில் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் ஊடாக 220 கோடி ரூபா நிதிஉதவியில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இப்புதிய கட்டடத் தொகுதியில் ஆய்வுகூடங்கள், விரிவுரை மண்டபங்கள், தாவர மற்றும் விலங்குப் பண்ணைகள் போன்ற வசதிகள் உள்ளடங்குகின்றன.