எவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை உள்ளது!
“எந்தவொரு நபருக்கும் வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை இருப்பதாகவும்,குறித்த வழக்குத் தொடர்பில் வெளிப்படுத்தக் கூடிய நியாயமான காரணங்கள் தன்னிடம் இருப்பதாக” அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேசசபையின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் 04 ஆம் திகதி தாக்கல் செய்த மனுவால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று(5) கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“சிவனொளிபாதமலை என்பது வணக்கத்துக்குரிய இடமென்று தன்னைப் போலவே தனது அமைச்சின் செயலாளருக்கும் தெரியும் என்பதால்  அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்“ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“சிவனொளிபாதமலை இரத்தினபுரி மாவட்டத்துக்கு உரியது என்றும்,அது நுவரெலியா மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் பரப்பும் செய்திகளில் உண்மையில்லை“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*