தமிழ்நாட்டு 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பு!
“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர் என்று குறித்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்“ வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“வெளிச்சம்” அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவைத் தரும் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்திற்காக ஆதரவை வழங்குவதாகவும்,இராணுத்தினர் உயிர்தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும்“ அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*