முரண் ஆட்டங்கள்..!

1.மெலியதை வலியது வெல்லும்
மெலியது தற்காத்துக் கொண்டால் தப்பிப் பிழைக்கும்🌺

(போர்க்குணம்/தற்காப்பு)

2.ஆடு புலி ஆட்ட
விளையாட்டு பிள்ளைப் பருவ விளையாட்டு.🏄

(வாழ்க்கை விளையாட்டுத் தொடர்)

3.சேவல் கொக்கரக்கோ…..
என்று கண்ட நேரமும்
கூவினால்
சூரியன் உதிப்பதில்லை.☀🌙

(காலத்தை யாராலும் மாற்ற முடியாது)

4.காட்டில் ஒருவன் கரடி துரத்த மரத்தில் ஏறினானாம்.
கரடி கீழ மனிதன் மேல.
அந்த நேரம் தான் அவனுக்கு அவசரம்.(Urine pass)
அவசரத்தை வெளியேற்றத் தொடங்கினானாம் .
அந்த நூல் போன்ற நீரோட்டத்தை கயிறு போல் பிடித்து
கரடி ஏறத் தொடங்கிட்டுதாம்.
மனிதனுக்கு கிட்ட கரடி வந்துட்டுதாம் .
பிடிக்கப் போகுதாம்.
அப்போ அவன் பயத்தில் வெளியேற்றுவதை நிறுத்திட்டானாம்.
கரடி விழுந்ததாம்.
செத்திட்டாம்.
மனிதன் இறங்கிப் போனானாம்.
இப்பிடியான தாத்தாட புளுகுக் கதைகளும் பழக்கப்பட்டதே.

(ஏமாற்றுச் செப்படிகளை தெளிந்தறிதல்)

4. மகாபாரத சகுனியையும் (ஆண்)
இராமாயணத்தில் கூனி (பெண்)
இரண்டு வேசதாரிகளையும் கதைகளில் மட்டுமல்ல வாழ்வியலிலும் அறியலாம்.

(சூழ்ச்சி காலம் காலமாய் தொடர்கதை)

யாரும் குழம்ப வேண்டாம்.இவை
மனதில் ஓடிக்கொண்டிருக்கும் தத்துவங்கள்.