கல்கமுவ பகுதியில் யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது!

கல்கமுவ, பலு​கெந்தேவ பிரதேசத்தில் யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்த 03 தந்தங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.