இந்திய அபிலாசையில் உதய சூரியன் சின்னத்தில் உதயமானது தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு!

உதய சூரியன் ஒன்றே களத்தில் நின்று வெற்றி வாகை சூடக் கூடிய சின்னம். அனைத்து அரசியல் தரப்பையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கக் கூடிய சின்னம். தற்போது அது தன் பட்டொளியை இழந்து நிற்கினும் செல்பவர் கைகளுக்குச் சென்றால் அது மீண்டும் பட்டொளி வீசும்.

மறுபுறம் உதய சூரியன் ஈழத் தமிழர் வரலாற்றில் பல வெற்றிகளை குவித்த சின்னம். சர்வதேசம் உட்பட பலராலும் அறியப்பட்ட சின்னம். தந்தை செல்வநாயகம், திரு அமிர்தலிங்கம். ஜி.ஜி. பொன்னம்பலம் என பல தலைவர்களை ஒன்றிணைத்த சின்னம்.

எனவே மாற்று அணி ஒன்றின் தேவை கட்டாயம் என பல தரப்பாலும் உணரப்பட்ட இத் தருணத்தில் உதய சூரியன் சின்னமானது இன்றியமையாததாகின்றது. அதன் மறு பிரசவம் காலத்தின் தேவையும் கட்டாயமுமாகின்றது.

வாரி சுருட்டி இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு பச்சை சாயம் பூசப்பட்ட தமிழர் பிரச்சனையை மீண்டும் சர்வதேசத்திடம் எடுத்துச் சென்று இது பச்சை அல்ல சிகப்பு என வாதாடுவதற்கு திரு சுரேஷ் பிரேமச்சந்திரனின் உதய சூரியன் தெரிவானது மிகச் சிறந்த தெரிவே.