மலர் மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மகிந்த அணி!

மகிந்த அணி  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ‘மலர் மொட்டு’ சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் இன்றைய தினம்(06) மாலை கொழும்பில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ‘மலர் மொட்டு’ சின்னத்தில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.