காசல்ரீ நீர்தேக்கத்தில் நீராடியவர் பலி!
காசல்ரீ நீர்தேக்கத்தின் கரையோரத்தில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா பகுதியிலே இன்று (06) மதியம் 2 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தின் கரையோரபகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஸமீர் என்பரவே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் மூன்று நாட்களாக தங்கியிருந்த நபர் அந்த விடுதிக்கு வந்த வெளிநாட்டு உள்ளச பயணிகளுடன் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆறு நீர்தேக்கத்துடன் சங்கமிக்கும் பகுதியில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டவரால் நீரில் மூழ்கியவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நீராடும் போது நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மரணம் தொடர்பிலானமேலதிக விசாரணை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*