கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தித்தர வேண்டும்!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தித்தர வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

பாதீட்டில் முன்வைக்கப்படுகின்ற திட்ட முன்மொழிவுகள் சரியான முறையில் நடைமுறைபடுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார்.