3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமனிலையில் நிறைவடைந்தது.

3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களையும் பெற்றது.

இதேவேளை, இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 373 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணி சார்பாக தனஞ்செய 119* ஓட்டங்களையும் ரொஷன் சில்வா 74* ஓட்டங்களையும் பெற்றனர். 3 வது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய தனது 3 வது டெஸ்ட் சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.