ஜேர்மனியின் பெர்லின் மற்றும் முனிச்சை இணைக்கும் சிறப்பு அதிகவேக ரயில்!

ஜேர்மனியின் பெர்லின் மற்றும் முனிச்சை இணைக்கும் சிறப்பு அதிகவேக ரயில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

குறித்த ரயிலை அந்நாட்டின் ரயில் நிறுவனமான Deutsche Bahn அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயிலானது ஒரு மணி நேரத்துக்கு 185 மைல்கள் செல்லும் திறன் கொண்டதாகும்.

வெறும் நான்கு மணி நேரத்துக்குள் இலக்கை அடைந்துவிடும்.

விமானத்தின் நேரத்துடன் இந்த அதிகவேக ரயில் போட்டி போடும் என Deutsche நிறுவனம் நம்புகிறது.

புதிய ரயில் ஒரு நாளைக்கு மூன்று தடவை பயணிக்கும், அதே நேரத்தில் சாதாரண வேகத்தில் பெர்லின் மற்றும் முனிச்சை இணைக்கும் ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று, ரயில் தடத்தில் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களின் வேகமும் சிறிதளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ரயில் சேவையானது ஞாயிறு முதல் தொடங்கப்படவுள்ளது.