சுவிட்சர்லாந்தில் நரியை சுட்டு கொன்ற நபர் மீது பொலிசார் வழக்குப்பதிவு!

சுவிட்சர்லாந்தில் நரியை சுட்டு கொன்ற நபர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் வாலெய்ஸ் மண்டலத்தில் தான் இச்சம்பவம் கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்தது.

பெண் நரி ஒன்றின் சடலம் அழுகிய நிலையில் பொலிசாரால் அப்போது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்கள் என்பதை உறுதி செய்த பொலிசார் அந்த நபரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேட்டையாடுதல் மற்றும் ஆயுதம் ஏந்துவதில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சட்டத்தை மீறியதால் அது தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

சுவிஸில் நரியை கொல்ல வேண்டுமானால் மண்டல அதிகாரியின் அனுமதியை பெறவேண்டியது அவசியமாகும்.

அதுவும், நரியானது 25 ஆடுகள் அல்லது அது போன்ற பண்ணை விலங்களை அடித்து கொன்றால் மட்டுமே நரியை கொல்ல அனுமதி வழங்கப்படும்.

கடந்தாண்டு மட்டும் நாட்டில் 389 ஆடுகளை நரிகள் அடித்து கொன்றுள்ளன. அதில் அதிகம் வாலெய்ஸ் மண்டலத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.