தொடரூந்து பருவச்சீட்டுக்களை பயன்படுத்தி அரச பேரூந்துகளில் பயணிக்க வசதிகள்!

தொடரூந்து பருவச்சீட்டுக்களை பயன்படுத்தி அரச பேரூந்துகளில் பயணிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமாயின் பொதுமக்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , 011 7 555 555 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை , தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவைப் புறக்கணிப்பு காரணமாக கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை காணக்கூடியதாய் இருந்தது.