சமூக வலைத்தளத்தில் பிரபலமான ட்விட்டரில் புதிய த்ரெட்ஸ்(threads) அம்சம்!

சமூக வலைத்தளத்தில் பிரபலமான ட்விட்டரில் புதிய த்ரெட்ஸ்(threads) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கத்திற்கு மாறாக ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும்.

ட்விட்டரின் இந்த புதிய த்ரெட்ஸ் அம்சம் வசதி மூலம் நீண்ட தகவல்களை பதிவிட பயன் தருவதாக அமையும் என்பதால் வழக்கத்தை விட இருமடங்கு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய முடியும்.

ட்விட்டர் பயனர்களிடையே இந்த அம்சத்திற்கான தேவை அதிகரித்த நிலையில் இருப்பதால் ட்விட்டரில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த 140 வார்த்தைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனால் ட்விட்டர் த்ரெட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது கருத்துக்களை முன்பை விட இருமடங்கு அதிக வார்த்தைகளில் பதிவிட கூடும் வகையில் உள்ளது.

ட்விட்டரில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 280 வார்த்தைகள் என்ற அளவு மாற்றப்படாமல் இந்த புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த ஒரு ட்விட் செய்ததும் கீழே காணப்படும் (+) என்ற குறியை கிளிக் செய்து தொடர்ச்சியாக ட்விட் பதிவிடலாம்.

புதிய அம்சத்திற்கான அப்டேட் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் கணினிகளில் வழங்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு த்ரெட் நிறைவு செய்ததும், ஸ்பேஸ் பார் தட்டினால் புதிய த்ரெட் கிடைக்கும்.

அந்த வகையில் தொடர்ச்சியாக 25 முறை புதிய த்ரெட்களை உருவாக்க முடியும். இதை தொடர்ந்து பயன்பாடுகளுக்கு ஏற்ப இந்த அம்சம் நீட்டிக்கப்படும் என்றும்.

இதன் மூலம் ட்விட்டர் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.