யாழ் கந்தர்மடத்தில் அமைந்துள்ள பண்பாட்டு மறுமலர்ச்சிக்கூடத்தில் இடப்பெற்ற நிகழ்வு!

யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் அமைந்துள்ள பண்பாட்டு மறுமலர்ச்சிக்கூடத்தில் இன்று இடப்பெற்ற நிகழ்வின் பதிவுகள்.

புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் மோகனராஜா(வட கரோலினா பல்கலைக்கழகம்) மற்றும் ஞானசேகரன் மகிசன்(பிறின்ஸ்டன் பல்கலைக்கழகம்) ஆகியோருடனான விசேட கலந்துரையாடலும் அரங்க நிகழ்வும்.

*பேராசிரியர் மோகனராஜா-எண்பதுகளின் அரங்க வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற “மண் சுமந்த மேனியர்”ஆற்றுகையின் நடிகர்.எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவராக இருந்தவர் என்பதும் அந்நாட்களில் பல்கலைக்கழக கலாசார குழுவினை தோற்றுவித்தவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*ஞானசேகரன் மகிசன்-மண் சுமந்த மேனியர் ஆற்றுகையாளர்களில் ஒருவரான ஞானசேகரனின் புதல்வர்.2016ல் கல்வி,சமூக சேவை,மாணவ தலைமைத்துவம் என்பவற்றில் முதல் நிலை மாணவராக தேர்வு செய்யப்பட்டு அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.