களனி,நெடுஞ்சாலை மேம்பாலம் திறந்து வைப்பு!

களனி, கனேமுல்ல நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று(வியாழக்கிழமை) காலை உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கனேமுல்ல பிரதான ரயில் நிலையத்தின் காரணமாக அந்நகரத்தில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 1768.21 மில்லியன் ரூபா செலவில் நல்லாட்சி அரசாங்க காலத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 504 மீற்றர் நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*