வர்த்தகம் பொருண்மியம் உள்ளுர் வியாபாரிகளது உரிமையை பாதுகாப்போம்.!

முறையற்ற வாணிப நடைமுறைகளாலும் முறையற்ற வாணிப அனுமதிகளாலும் எமது பிரதேச வர்த்தகர்கள் அண்மைக்காலமாக கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
புத்தாண்டு , நத்தார் , தீபாவளி போன்ற கொண்டாட்ட தினங்களிலும் நல்லூர் போன்ற உற்சவ காலங்களிலும் இம்முறையற்ற வாணிபங்கள் முனைப்பு பெறுகின்றன.

அதற்கும் மேலாக, போராலும் கடும் பொருளாதாரத்தடையாலும் பாதிக்க்ப்பட்டிருந்த வர்த்தகர்களுக்கு ஒரு மானிய அடிப்படியிலான பொறிமுறை வழங்கப்ப்டுவது அவசியம்.
போரிற்கு பின்னரான மீளுருவாக்கத்தில் இது ஒரு வழமையான நடைமுறை.
ஆனால் எமது பிரதேச வர்த்தகர்கள் எந்தவொரு நிவாரண / பாதுகாப்பு பொறிமுறையும் இன்றி , சடுதியாக வந்து இறங்கிய தென்னிலங்கை பல்தேசியக்கம்பனிகளோடும் பல்ம்பொருந்திய பிஸ்னஸ் மாபியாக்களோடும் போட்டி போட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய யாழ் வர்த்தகர் சங்க தலைவர், தனது தனிப்ப்ட்ட அரசியல் நலன்களுக்க்காக பாடுபட்டாரே தவிர , வர்த்தகர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இந்த விளைவாக , எமது பிரதேச வர்த்தகர்கள் பலர், கடனால் முடங்கி தொழிலை விட்டு ஒதுங்கும் பரிதாப நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், #தூயகரங்கள்_தூயநகரம் எனும் தொனிப்பொருளுடன் கள்மிறங்கி இருக்கும், திரு மணிவண்ணன் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர், எமது பிரதேச பொருண்மியம் சார்ந்தும் வர்த்தக சமூகம் சார்ந்தும் மிக தெளிவான பார்வையை கொண்டிருக்கிறார்கள்.

எமது பிரதேச வர்த்த்கர்களிற்கான பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்து திரு மணிவண்ணன் அவர்கள் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
முறைய்ற்ற வாணிப அனுமதிகளுக்கு இனி இடமில்லை என உறுதிபட கூறியிருக்கிறார்.

அரசியல், கலை கலாசாரம் , சூழல் பாதுகாப்பு , கழிவகற்றல், பெண்கள் உரிமை என அனைத்துவிடயங்களிலும் மிக தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பட்டை வெளிப்ப்டுத்திவந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், வர்த்தகம் பொருண்மியம் சார்ந்தும் தமது தெளிவான தூரநோக்கான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறாரகள்.

தெளிவாகவும் உறுதியாகவும் தூரநோக்கோடும் அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் செயற்படும் இந்த இளையோரை ஆதரிக்காது யாரை ஆதரிப்பது??

#தூயகரங்கள்_தூயநகரம்
#மலரும்_மாநகரம்
#clean_hands_clean_city

Manivannan Visvalingam.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*