தாதியர்களின் வேலை நிறுத்தம் நிறைவு!

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

நாளாந்தம் பணிக்கு வரும் நேரத்தை பதிவுசெய்வதற்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுத்துவதற்கு எதிராக இந்த பணி நிறுத்த முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கைவிரல் அடையாள பதிவுமுறை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் அதனை நிறுத்துவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில், கைவிரல் பதிவில் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்கும் வரை சாதாரண முறையில் கையொப்பமிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடைமுறை பிரச்சினை சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலம் இது சம்பந்தமாக உறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பணி நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*