இருதினங்கள் மத்துகம அலுத்கம வீதிமூடப்படும்!

வெலிப்பென்ன பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையின் காரணமாக, எதிர்வரும் 16,17 ஆகிய இரு தினங்கள் மத்துகம- அலுத்கம வீதியினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வீதி எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 9 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மூடப்படவுள்ளது.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வெலிப்பென்ன போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலை, மல்வத்தை வீதி, ஹிரிவெத்தல வீதி, போபிட்டிய வீதி, நாரவில வீதி ஆகியவற்றை சாரதிகள் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*