வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகள் என்பவற்றை இன்றைய தினம் 08 மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகளை நாளை விநியோகிப்பதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் இரண்டு நாட்களால் பிற்போடப்பட்டது.

வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகள் அரசாங்க அச்சகத்தில் இருந்து தாமதமாக கிடைக்கப் பெற்றதன் காரணமாகவும் தபால் ஊழியர்கள் தொழிற் சங்கத்தின் அறிவிப்பு காரணமாகவும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதால் இன்றும் நாளையும் இரண்டு வகையான வாக்காளர் அட்டைகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*