அப்பலோ ஜெயலலிதா மரணம் ஆவணங்களைத் தாக்கல் செய்தது!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வைத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகிறார்.

அந்தவகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அப்பலோ மருத்துவமனை இதனைச் சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, ஆவணங்களை ஜனவரி 12ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் காலக்கெடு விதித்தது.

இந்நிலையிலேயே, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*