ஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்கலாம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிக்கலாம் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபோது குறித்த சட்டம் அமுலுக்கு வராத​தையடுத்து 6 வருடங்கள் தான் பதவி வகிக்க முடியுமா? என உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.

இதற்கமைய விடயம் தொடர்பில் ஆராந்த சட்டமா அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிப்பதில் எந்தவித தடையும் இல்லை என உயர்நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் இதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*