நாச்சியார் திருக்கோலத்தில் வீரராகவர் உலா!

திருவள்ளூர், வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளில் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்த பெருமாள்.

திருவள்ளூர், வைத்திய வீரராகவர் கோயிலில் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.
108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் வைத்திய வீரராகவர் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளில், புதன்கிழமை அதிகாலையில் நாச்சியார் திருக்கோலத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், இரவில் யாளி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகள் வழியாக சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.