தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம்!

கடந்த 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எனவே பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு சுமூகமான முறையில் நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு தமக்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*