பிரதமரை சந்திக்கவுள்ள ஐ.தே.முன்னணியின் தலைவர்கள்!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்து பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*