ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசனின் 9ம்ஆண்டு நினைவு வணக்கநாள்!

இன்று மாலை ஈகைப்பேரொளி முருகதாசனின் 9ம்ஆண்டு நினைவு வணக்கநாள் ஐ.நா முன்றலில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. முன்றலில் தன்னுயிரை மாய்த்த ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு இன்று வணக்கம் செலுத்தப்பட்டது.

ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தன்னுயிரை மாய்த்த ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு அவர் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. கடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*