மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உப தபால் மா அதிபர் மீது தாக்குதல்!

செலுத்தப்பட்ட மின் கட்டணம் பட்டியலில் கழிக்க தாமதமானதால் மாரவில, ஹத்திட்டிய உப தபால் மா அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், க்ரேடன் ஆல்பிரட் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இற்றைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஹத்திட்டிய உப தபால் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டமையே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*