யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018!


யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டிய நடனப் போட்டி தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஒழங்கு செய்யபட்டு வெகு சிறப்பாக 24.03.18 அன்று என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்டது. வாகைமயில் நடனப்போட்டிகள் தெரிவுப்போட்டி இறுதிப்போட்டி என நடாத்தப்பட்டது. மாநில மட்டத்தில முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த வகையில் 17.03.2018 எனனெப்பெற்றால் நகரிலும் 18.03.2018 ஸ்ருற்காட் நகரிலும் ஆரம்பமாகிய இப்போட்டிகளுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சென்ற 24.03.2018 என்னெபெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கலைக் கூடங்கள், மற்றும் நடனக் கலை பயில்வோர் தமது கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் 250ற்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என வயதுப்பிரிவிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தனிநடனம், குழுநடனம், விடுhலை நடனம் என போட்டிகள் நடாத்தப்பட்டன. அத்துடன் நாட்டிய நாடகமும் போட்டி நிகழ்வாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்ற இம் மாபெரும் நடனப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளும், அதிசிறந்த நடனக் கலைஞர்களுக்கு வயதுப்பிரிவுப்படி வாகைமயில் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.