சாரதியை தாக்கிய கணவன் மனைவி ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்!

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும், இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Powered by Blogger.