30 வருடங்களாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றுவது நியாயமில்லை!

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று திருப்பவும் நாட்டுக்கு வந்து காணியை வழங்குமாறு கேட்பதில் நியாஜம் இல்லை என முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணி விடுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சில காணிகளின் உரிமையாளர்கள் நீண்டகாலமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவிட்டு, தற்போது நாடு திரும்பி அவற்றுக்கான உரிமையை கோருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்காக கடந்த 30 வருடங்களாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றுவது நியாயமில்லை.
எனவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து, அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.