மன்னார் மாவட்டத்தில் வறட்சியால் 83,163 பேர் பாதிப்பு!இந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்  மன்னார் மாவட்டத்தில் 24ஆயிரத்து 254 குடும்பங்களைச் சேர்ந்த 83ஆயிரத்து 163 பேர் வறட்சியினால் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் மொத்தமாக வறட்சியினால் 35ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்து 1இலட்சத்து 24ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுகொடுப்பதற்காக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தற்போதைய வளங்களாக 4 டக்டர் பவுஸ்சர்கள் , 156 தண்ணீர் தாங்கிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் எதிர்கால வறட்சி நிலையை நிர்வகிக்க 7 லொறி பவுஸ்சரகள் 10 டக்டர் பவுஸ்சரகள் மற்றும் 286 குடிநீர் தாங்கிகள் தேவை என்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.