இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம் – யேர்மனியில் நிகழ்வு!

யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் “ONKEL Hassan” “மாமா ஹசன்” கண்காட்சி Pankow மாவட்ட அருங்காட்சியகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வெற்றிகரமாக அமையப்பெற்றது.

பல்லின மக்களின் புலம்பெயர்வு வெவ்வேறு காரணங்களுக்காக இருந்தாலும். “மாமா ஹசன்” என்பது தொழிலாளர் பிரவேசத்தின் ஒரு எடுத்துக்காட்டு. இக் கண்காட்சி தற்போது கடந்த காலத்தை ஒருங்கிணைத்து வெளிக்காட்டுகின்ற வேளையிலும், ஒரு பகுதி முதல் தலைமுறையின் தொழிலாளர் குடியேறியவர்களைக் காட்டுகிறது, இரண்டாம் பகுதி ஜெர்மனியில் வளர்ந்த பேரப்பிள்ளைகளின் தலைமுறையை குறிக்கின்றது.

இக் கண்காட்சியின் மைய கருத்துக்கமைய ஈழத்தமிழர்களின் அடையாளங்களையும் அத்தோடு அவர்களின் புலம்பெயர் காரணிகளையும் கண்காட்சியாக வடிவமைத்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு வெளிக்காட்டி உள்ளது.

சென்ற வாரம் நடைபெற்ற இறுதி நிகழ்வில் ஈழத்தமிழர்களின் அடையாளங்களையும் , வரலாற்றையும் , கலையையும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அன்றைய நிகழ்வு பங்கோவ் மாவட்ட முதல்வர் மதிப்பிற்குரிய திரு Sören Benn அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.