மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி நடித்த ‘மிஸ்ஸிங்’ ட்ரெய்லர் ரிலீஸ்!


மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி நடித்த ‘மிஸ்ஸிங்’ என்கிற பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. ‘காதலர் தேசம்’,‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்திருக்கும் தபு, பாலிவுட்டில் செட்டிலாகி உள்ளார். அவர், 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த‘தில்பே மத்லே யார்’மற்றும்‘காத்’ஆகிய படங்களில் மனோஜ் பாஜ்பாய் உடன்
ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்நிலையில், மனோஜ் பாஜ்பாய் - தபு ஜோடி, ‘மிஸ்ஸிங்’ என்கிற படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முகுல் அபையங்கர் இயக்கியுள்ள இப்படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்தது. இதில் முக்கிய வேடத்தில் அன்னு கபூர் நடித்துள்ளார். ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் புரொடக்சன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நீரஜ் பாண்டே தயாரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.