சாவகச்சேரி நகர சபைக்கான தலைவராக கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை தெரிவு

சாவகச்சேரி நகர சபைக்கான புதிய தலைவரை தெரிவுசெய்யும் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் அமர்வு இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற்றது. 

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதனடிப்படியில் 12 வாக்குகளை பெற்று சாவகச்சேரி நகரசபையின் முதல் பெண் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இராமநாதன் சிவமங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

புதிய மேயரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் வேட்பாளராக இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இராமநாதன் சிவமங்கை 12 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யோ.ஜெக்குமார் 6 வாக்குகளையும் பெற்றார். 

இதனையடுத்து சாவகச்சேரி நகரசபையின் தலைவராக இராமநாதன் சிவமங்கையும் உப தலைவராக பாலமயூரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 
Powered by Blogger.