கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் சைட்டத்தை இணைக்க வேண்டாம்!

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஒழிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் வாக்குறுதியை மீறி செயற்டுகின்றது. சைட்டத்தை கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகழகத்துடன் இணைப்பது மாணவர்களின் நலனை கருதியல்ல. முதலாளிகளின் வருமானத்தை உயர்த்தி சுதந்திர கல்வி மற்றும் சுகாதாரத்தை தனியார் மயப்படுத்துவதேயாகும்.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொத்தலாவலை பல்கலைகழகத்துடன் இணைப்பதே அரசாங்கத்தின் நோக்கமானால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மீண்டும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக அணைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

கொத்தலாவலை பல்கலைகழகத்துடன் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆர்பாட்டம்மொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம், மருத்துவ பீட மாணவர் பெற்றோர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.