"தேசத்தாய்" மென்பந்து வெற்றிக்கிண்ணம் கனகராயன் குளம்!

கனகராயன் குளம் ஐக்கிய விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய "தேசத்தாய்" மென்பந்து வெற்றிக்கிண்ணம் கனகராயன் குளம் ம.வி மைதானத்தில் நேற்று முன்தினம் 25.03.2018(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கான கொடியினை கழகத்தின் தலைவர் திரு.யோ.நிதர்சன் ஏற்றிவைக்க தேசத்தாய் அன்னை பூபதி அவர்களுக்கான ஒருநிமிட அகவணக்கத்தைத்தொடர்ந்து வீரர்களுக்கான சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. பன்னிரண்டு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கான ஆட்டநாயகன் விருதுகளும் வழங்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மையால் இறுதியாட்டம் பிற்போடப்பட்டது. இறுதிப்போட்டிக்காக மன்னார் மடுவிலிருந்து வருகைதந்த ஐக்கியம் T.P அணியுடன் கனகராயன்குளம் ஐக்கியவிளையாட்டுக் கழகம் அணி எதிர்வரும் வாரம் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேற்படி போட்டியினை கழக உறுப்பினர் திரு.வே.சுதர்சன் பிரதானமாக ஒழுங்கு படுத்தியிருந்தார் அவருக்கு ஏனைய வீரர்களும் வளர்ந்து வரும் சிறிய வீரர்களும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். போட்டி நிகழ்விற்காக பிரதான வெற்றிக்கிண்ணத்திற்கான நிதி அனுசரணையை வீடமைப்பு அதிகார சபையின் தொழினுட்ப உத்தியோகத்தரும் சமூக செயற்பாட்டாளருமாகிய திரு.மோர்சிபவன் வழங்கியிருந்தார். ஒலிபரப்பு அனுசரணையை ஆலங்குளம் தேவா சவுண்ட் குழுவினர் இலவசமாக வழங்கியிருந்தார்கள்.Powered by Blogger.