சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன!

2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. இன்று இரவு இணையத்தளத்தில் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித  குறிப்பிட்டார்.

 கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில், ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

 நவீன தொழிநுட்ப உபகரணங்கள் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
Powered by Blogger.