தொண்டராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வட மாகாணத்தில் 646 பேர் தொண்டர் ஆசிரியர்களாக இருந்து வரும் நிலையில், நேர்முகத் தேர்வு மூலம் 182 பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க தற்போது ஏற்பாடாகியிருப்பதால் இவர்கள் இன்று ஆர்ப்பாட்ட்ததில் ஈடுபட்டனர். 

வட மாகாண சபையின் 119 வது அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் மாகாணசபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களின் கதவுகளில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது நிபந்தனைகளை நிறைவேற்ற சகல உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்குமாறு இவர்கள் வலியுறுத்தினர். 

இவ்விடயம் தொடர்பில் இன்றைய வட மாகாண சபையிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது 

தற்போது 182 பேருக்கு நியமனம் வழங்கினாலும் ஏனைய சகலருக்கும் நிச்சயம் நேர்முகத்தேர்வு இடம்பெற்று அவர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார். 
Powered by Blogger.