சிலாபம் நகர சபைக்கான வாக்கெடுப்பு கால அறிவித்தல் பிற்போடப்பட்டது!

சிலாபம் நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கால அறிவித்தல் இன்றி பிற்போடப்பட்டுள்ளது. 

இன்று காலை 08.30 மணிக்கு சபை ஒன்று கூடவுள்ளதாகவும், அதேநேரத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் என்று ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 09 உறுப்பினர்கள் மாத்திரமே சபைக்கு சமூகமளித்துள்ளனர். 

வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமானால் குறைந்தது 10 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். 

சிலாபம் நகர சபை மொத்தமாக 20 உறுப்பினர்களை கொண்டது என்பதுடன், இன்றைய தினம் ஐ.தே.க. வின் 07 உறுப்பினர்களும்,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 01 உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியில் 01 உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்துள்ளனர். 

எவ்வாறாயினும் போதுமான வரவு அற்ற காரணத்தால் வாக்கெடுப்பு நடவடிக்கை வடமேல் மாகாண ஆளுநர் ரஞ்சன் ஜயசிங்கவினால் பிற்போடப்பட்டுள்ளது.
Powered by Blogger.