பிளேட்டினால் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியவர் பொலிஸாரால் கைது!

வெல்லவாய பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் பிளேட்டினால் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

வெல்லவாய பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள குறித்த நபரின் வீட்டிற்கு அண்மையில் இனம்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ள போதிலும் வெல்லவாய பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

இதன் காரணமாக தனது குடும்பம் வீடின்றி நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி இவ்வாறு தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
Powered by Blogger.