ஒலிம்பிக்கில் கிரிக்கெட்2028இல் சேர்க்கப்படுமாம்?

ஒலிம்பிக்கை போலவே கிரிக்கெட் உலக கோப்பையும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட்டை சேர்க்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. 2018ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 5 நாள் நிர்வாக கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. கடைசி நாளான இன்று, கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது மற்றும் மேலும் உலகளவில் பரப்பி கிரிக்கெட்டை வளர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்திற்கு பின்னர் பேசிய ஐசிசி-யின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அதற்கான நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கக்கோரி சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டது. எனவே 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் எனவும் டேவிட் ரிச்சர்ட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.