பல்வேறு குற்றச் செயல்களுடன் 2630 பேர் கைது!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 2630 பேர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று அதிகாலை 4.00 மணி முதல் காலை 8.00 மணி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாகனப் போக்குவரத்து சட்ட மீறல்கள் தொடர்பில் 8276 வழக்குகள் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 
Powered by Blogger.