சட்டீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர்  மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பெண்கள் உள்பட 8 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்தநிலையில், சுக்மா மாவட்டம் புர்காபால் பகுதி உள்ள மெட்டாகுடம் வனப்பகுதியில் நேற்று நக்சலைட் தேடுதல் வேட்டையில் மாவட்ட ரிசர்வ் போலீசார்,  சிறப்பு படை போலீசார்அடங்கிய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் பெண் உள்பட 2 நச்லைட்கள்  கொல்லப்பட்டனர். மேலும் பல நக்சலைட்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சக நக்சலைட்கள் மீட்டு, வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

Powered by Blogger.