தென்கிழக்கு ஆசிய 32ஆவது மாநாடு சிங்கப்பூரில்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கத்தின் 32ஆவது மாநாடு சிங்கப்பூரில்(28.04.2018)ஆரம்பமாகும் நிலையில்,பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர்கள் ஈடுபட்டனர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் 10 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர்.

தீவிரவாத அச்சுறுத்தல், இணையவழித் தாக்குதல், குற்றச்செயல்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டன.
உலகளாவிய ரீதியில் தீவிரவாத நடவடிக்கைகள், இணையவழித் தாக்குதல், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென, சிங்கப்பூர் வெளி விவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.