5 ஆயி­ரம் மற்­றும் 10ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டங்­க­ளில் கிந்துஜனுக்கு தங்கங்கள்!

இள­நிலைப் பிரி­வி­ன­ருக்­கான தேசி­ய­மட்ட தட­க­ளத் தொட­ரில் 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 5 ஆயி­ரம் மற்­றும் 10ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டங்­க­ளில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கிந்­து­ஜன் தங்­கப் பதக்­கங்­க­ளைச் சுவீ­க­ரித்­தார்.
கொழும்பு சுக­ததாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 5 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கிந்­து­ஜன் 15 நிமி­டங்­கள் 56 செக்­கன்­கள் 10 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப் பதக்­கத்தை வென்­றார்.
இவர் 10 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் 33 நிமி­டங்­கள் 56 செக்­கன்­கள் 81 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.
Powered by Blogger.