5வயதில் பாலியல் வன்கொடுமையால்நானும் பாதிக்கப்பட்டேன்!

என்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நானும் சிறுவயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி பெற்றோர்களிடம் தெரிவிப்பேன். அப்போது எனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாது. பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் நமக்கு தெரிந்த உறவினர்கள் மூலமாகத்தான் நடக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால்தான் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம் என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.